search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவி பிரதீபா தற்கொலை"

    டாக்டராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று எண்ணிய பிரதீபாவை இழந்து தவித்து வருவதாக அவருடைய பெரியப்பா கண்ணீர் மல்க தெரிவித்தார். #NEET2018 #Pratheeba #TNStudentSuicide
    விழுப்புரம்:

    நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மாணவியின் பெரியப்பா முருகன் கூறியதாவது:-

    நீட் தேர்வு எழுதி எப்படியாவது அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து டாக்டராகி விட வேண்டும் என்பது பிரதீபாவின் கனவாக இருந்தது.

    கடந்த மே மாதம் நடந்த நீட் தேர்வில் பிரதீபாவுக்கு வேலூரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது. அங்கு சென்று தேர்வு எழுதினார். அந்த தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் பிரதீபா குறைவான மதிப்பெண் பெற்றிருந்தாள். இதனால் அவள் மனதளவில் பாதிப்படைந்து காணப்பட்டார். அவளுக்கு நாங்கள் ஆறுதல் கூறினோம். இருப்பினும் அவளால் அதனை சகித்து கொள்ள முடியவில்லை.

    தற்கொலை செய்து கொண்ட மாணவி பிரதீபா

    தான் கண்ட டாக்டர் கனவு நிறைவேறாமல் போய் விட்டதே என்று எண்ணிய பிரதீபா வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். டாக்டராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று எண்ணிய பிரதீபாவை இழந்து தவித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார். #NEET2018 #Pratheeba #TNStudentSuicide
    ×